Sudharshini / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
இலங்கையின் சுற்றலாத்துறையை அபிவிருத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு, மாத்தளை மாவட்டத்தின் எல்லைப் பகுதியிலுள்ள கெக்கிராவை, கலாவௌ, பலலுவௌ ஆகிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வன ஜுவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஏ.ரத்நாயக்க, நேற்று(22) தெரிவித்தார்.
இப்பகுதிகளுக்கு காட்டு யானைகள் அதிகமாக வருவதுடன் அவை ஆபத்துக் குறைந்தனவாகவும் உள்ளன. அத்துடன் தம்புள்ளை, மின்னேரிய, ஹபரண பகுதிகளானது காட்டு யானைகளை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கும் வாகனங்களில் சவாரி செய்து காட்டு வளங்களைப் பார்வையிடுபவர்களுக்கும் சொர்க்கபுரியாக மாறி வருகிறது.
எனவே, இப்பகுதிகளை அபிவிருத்தி செய்வதுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் உல்லாச பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின்படி காட்டு யானைகளை அதிகம் கொண்ட பகுதிகளாக மேற்படி பிரதேசங்கள் விளங்குகின்றன. சுமார் 350 யானைகள் வரை இங்கு சுதந்திரமாக நடமாடி திரிகின்றன என அவர் மேலும் கூறினார்.
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
02 May 2026
02 May 2026