Kanagaraj / 2015 செப்டெம்பர் 26 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில் இயங்கி வருகின்ற முன்பள்ளிகளில் சிறுவர்;களுக்கு முறையாக ஆரம்பக் கல்வியை வழங்குவதில்லை என பெற்றோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேற்படி மாவட்டத்தில் உள்ள தோட்டப்பகுதிகளில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவ்வாறு இயங்கி வருகின்ற சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் முன்பள்ளிகளும் நடத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தோட்டத் தொழிலாளாகள் தாம் வேலைக்கு செல்லும்போது 5 வயதுக்கும் குறைவான பிள்ளைகளை சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் விட்டுச் செல்கின்றனர். முன்பள்ளிக்குச் செல்ல கூடிய வயதுடைய பிள்ளைகளுக்கு சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படுகின்றது.
மேற்படி மாவட்டத்தல் உள்ள பெருபாலான தோட்டப்பகுதிகளில் இயங்கி வரும் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பெரும்பான்மை இனத்தவர்கள் கடமையாற்றுகின்றனர். இதனால் முன்பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் முறையான கல்வியை கற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுகின்றது. அத்தோடு மொழி பிரச்சினையாளும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே, தோட்டப்பகுதிகளில் உள்ள முன்பள்ளிகளை திறம்பட செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
28 minute ago
35 minute ago
54 minute ago