Sudharshini / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக், சி.எம்.ரிஃபாத்
தம்புள்ளை, மொரகொல்லாவ பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து, மூன்று வயதுச் சிறுவனின் சடலத்தை தம்புள்ளை பொலிஸார், சனிக்கிழமை (12) மாலை மீட்டுள்ளனர்.
விஹங்க சம்பத என்ற 3 வயதுச் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டிலிருந்த இச்சிறுவன், சனிக்கிழமை மாலை காணாமற் போயுள்ளார். இந்நிலையில், அயலவர்களின் உதவியுடன் சிறுவனின் பெற்றோர் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கிணற்றிலிருந்து சிறுவன் கண்டெடுக்கப்பட்டுள்ளான்.
உடனடியாக சிறுவனை தம்புள்ளை வைத்தியசாலைக்கு கொண்டுச்சென்ற போது, சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
18 minute ago
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
32 minute ago
3 hours ago