Niroshini / 2016 மே 30 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
“சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மேலும் 80 ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்படும்” என்று சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார்.
மேற்படி மாகாணத்தின் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலும் தமிழ்மொழி மூலம் 80 ஆசிரியர் உதவியாளர்கள் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனம் ஜுன் மாதம் முதலாம் திகதி வழங்க தீர்மானித்திருந்தபோதிலும் அன்றையதினம் கேகாலை மாவட்டத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கருத்திற் கொண்டு, அவர்களுக்கான விசேட வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது குறித்து ஜனாதிபதி தலைமையில் கேகாலையில் நடைபெறவுள்ள விசேட அபிவிருத்திகுழு கூட்டத்தில் மாகாண அமைச்சர்கள் அதிகாரிகள் அனைவரும் அதில் கலந்து கொள்ளவுள்ளதன் காரணத்தினால் மேற்படி நியமனங்கள் நாளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு, நாளை காலை 8.30 மணிக்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் மற்றும் மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய ஆகியோர் தலைமையில் சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் இடம்பெறும்.
மேற்படி மாகாணத்தில் நியமனம் பெறவுள்ள சகல ஆசிரியர் உதவியாளர்களுக்கும் இன்றைய தினம் இரத்தினபுரியில் நடைபெற்ற செயலமர்வின்போது அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .