Janu / 2026 மார்ச் 23 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் நிலவும் எரிபொருள் தேவையை கருத்தில்கொண்டு, அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்திருந்த ஐந்து சந்தேக நபர்கள் பல பிரதேசங்களில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (22) அன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் (கோப்பாய்): யாழ்ப்பாண பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கரந்தன் வீதியிலுள்ள தனியார் களஞ்சியம் ஒன்றிலிருந்து 4240 லீட்டர் டீசல், 840 லீட்டர் பெட்ரோல் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக தோப்புக்காடு பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட்: வென்ச்சூர் தோட்டம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்த 565 லீட்டர் டீசலுடன் 53 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
நிட்டம்புவ: கம்மல்பிட்டிய-பமுனுவ பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் 146 லீட்டர் பெட்ரோலை சேமித்து வைத்திருந்த பஸ்யால பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மகரகம (பமுனுவ): பமுனுவ பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 22 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த 44 வயதுடைய நபர் நுகேகொடை குற்ற புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
மினுவாங்கொடை: கீனகஹலந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 20 லீட்டர் பெட்ரோலை சேமித்து வைத்திருந்த 53 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
10 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
3 hours ago