2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

யாத்திரைக்குச் சென்ற 9 பேர் கைது

Freelancer   / 2021 டிசெம்பர் 25 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

சிவனொளிபாதமலை யாத்திரையில் கேரள கஞ்சா போதைப் பொருளுடன் சென்ற 9 பேர் ஹட்டன் கோட்ட குற்றப்புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த குற்றத்தடுப்பு பிரிவினர் நேற்று (24)  ஹட்டன் மோப்பநாய் பிரிவுடன் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சா போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் கொழும்பு, கண்டி, கலேவல உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களை இன்று  நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X