2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

யானையிடம் இருந்து பறிபோனது

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 24 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச சபையின் அதிகாரமானது, ஐக்கிய தேசியக் கட்சியின்
கட்டுப்பாட்டிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய
இருகட்சிகளின் இணைத் தலைமைகளது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எல்ல பிரதேச சபையின் அதிகாரம் தவிசாளர் உதய ஜீவ பண்டாரவின் தலைமையில்,

ஐக்கிய தேசியக்கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் அடுத்தாண்டிற்கான
வரவு –செலவுத்திட்ட அறிக்கை இரு முறை சமர்ப்பிக்கப்படும், அவ்வரவு – செலவுத்திட்டம்
இரண்டு தடவைகளும் தோற்கடிக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று (23) பதுளை மாவட்ட உள்ளுராட்சிமன்ற ஆணையாளர் மங்கள
விஜயநாயக்க தலைமையில், எல்ல பிரதேச சபை கூடி புதிய தலைவரைத் தெரிவு செய்யும்
நிகழ்வு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்கட்சி சார்பாக எல்ல பிரதேச சபை தவிசாளராக
இருந்த உதய ஜீவ பண்டாரவும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக எம்.டி.மாலக்க பிரபாத்
சிரிசேனவும், புதியஎல்ல பிரதேச சபைக்காக போட்டியிட்டனர்.

திறந்த வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.டி. மாலக்க
பிரபாத் சிரிசேன வெற்றி பெற்றுஇ எல்ல பிரதேச சபையின் புதிய தவிசாளராகத் தெரிவு
செய்யப்பட்டார்.

ஆறு மேலதிக வாக்குகளினால் அவர் தெரிவானார். 21 உறுப்பினர்களைக் கொண்ட எல்ல
பிரதேச சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஏழுபேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஐந்து பேரும், சுயேச்சைக்குழு ஒன்றுமாக 13 பேர் எம்.டி. மாலக்க பிரபாத்
சிரிசேனவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஏழுபேர் மாத்திரம் முன்னாள் தவிசாளர் உதயஜீவ
பண்டாரவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனடிப்படையில் 13 உறுப்பினர்களது
ஆதரவினைப் பெற்றுள்ளதுடன் ஆறு அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் எம்.டி.
மாலக்க பிரபாத் சிரிசேன வெற்றிபெற்று, மாவட்டஆணையாளர் முன்னிலையில், எல்ல
பிரதேச சபைத் தவிசாளராக சத்திய பிரமாணம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கமைய, எல்ல பிரதேச சபையானது, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்த வகையிலான இணைத் தலைமைகளின்
கட்டுப்பாட்டில் இயங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X