Janu / 2023 ஜூன் 08 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோ மீட்டர் தூரத்தை ஓய்வு எடுக்காமல் மூன்று நாட்களில் நடந்து உலக சாதனை நிலைநாட்ட மலையகத்தை சேர்ந்த இரட்டையர்களான இரு இளைஞர்கள் முன்வந்துள்ளனர்.
எதிர்வரும் (14.06.2023) நடை பயணத்தை யாழில் இருந்து ஆரம்பிக்கும் அவ்விருவரும், (16) ஆம் திகதியன்று காலியில் நிறைவு செய்யவுள்ளனர்.
பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த ஆர்.ஏ.விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இரட்டை சகோதர்கள் இந்த சாதனை பயணத்தை தொடரவுள்ளனர்.
இந்த சாதனை பயணத்தை நோக்கி பயணிக்கவுள்ள இவர்கள் உலக சாதனையில் இடம் பிடிப்பதற்கான அனுமதி கடதமும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்தும் ,புத்தளத்திலிருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுடன்,கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


29 minute ago
35 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
35 minute ago
57 minute ago