2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

யுவதியின் சடலத்தை தோண்டி நிர்வாணமாக்கி வீசியுள்ளனர்

Editorial   / 2024 ஜனவரி 07 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுத்து, சடலத்தின் ஆடைகள் அத்தனையையும் கழற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளனர்  என பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பதுலுகஸ்தான பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா மதுஷானி என்ற 24 வயதுடைய யுவதியே கடந்த புதன்கிழமை (03) உயிரிழந்துள்ளார்.

அனைத்து மத சடங்குகளுக்கும் பிறகு  சடலம் மறுநாள் (04) புதைக்கப்பட்டது.

அந்த யுவதிக்கு ஞாயிற்றுக்கிழமை (7) பிறந்த நாளாகும்.

இந்நிலையில், அந்த யுவதியின் தந்தை    கல்லறைக்குச் சென்றுள்ளார். அப்போது  ​​தனது மகளின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு ஆடைகள் இன்றி நிர்வாணமாக எடுக்கப்பட்டிருப்பதைக் கண்டுள்ளார்.

 இது தொடர்பில் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ஆரியவன்ச


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X