2025 ஜூலை 02, புதன்கிழமை

ரஜ மஹா விகாரைகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 21 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜ மஹா விகாரைகளுக்கு ஏற்பட்டுள்ள கவலைக்கிடமான நிலைமைகள் தொடர்பில் மத்திய மாகாண சபை கவனம் செலுத்த வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சன்ன கலப்பத்திகே, மத்திய மாகாணசபையில் முன்வைத்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் சபையில் உரையாற்றிய அவர்,

முற்காலத்தில் எமது அரசர்களால் மிகவும் அழகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட ரஜ மஹா விகாரைகள், எமது தேசிய உரிமைகளையும் கலாசாரத்தையும் வெளிப்படுத்திய முக்கிய ஞாபகச் சின்னங்களாகும்.

சிங்கள மக்களின் வாழ்க்கை முறை, கலை நுட்பங்கள் போன்ற எமது சமூகத்துக்குரிய பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு அம்சங்களுக்கு இங்கு குறிப்பிடப்பட்ட ரஜ மஹா விகாரைகள் பேருதிவியாக அமைந்தன.

நாட்டின் பெருமதிமிக்க வளங்களான இந்த ரஜ மஹா விகாரைகள் எவ்வித பாதுகாப்புமின்றி புனரமைக்கப்படாது முழுமையாக அசுத்தமடைந்துள்ளதுடன் சிலர் விகாரைகளைச் சுற்றியுள்ள வளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அமுனுகம கிராமத்திலுள்ள தெகல்தொரு ரஜ மஹா விகாரை ஸ்ரீ தலதா மாளிகைக்கு அடுத்ததாக இருக்கும் அரச அங்கிகாரம்பெற்ற பெறுமதிமிக்க விகாரையாகும். இவ்விகாரையையும் அதைச் சூழவுள்ள காணியையும் புனித பூமியாகப் பிரகடணப்படுத்தி அந்த விகாரையை முறையாக மேம்படுத்த வேண்டும்' என்றார். யுnஉhழச


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .