R.Maheshwary / 2023 பெப்ரவரி 15 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.சந்ரு
நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியில் ஓட்டோவொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் பலத்த காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து நேற்று (14) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவில் இருந்து நானுஓயா- ரதல்ல குறுக்கு வீதியூடாக தலவாக்கலையை நோக்கி சென்று கொண்டிருந்த ஓட்டோவொன்று, சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கடந்த மாதம் 20ஆம் திகதி விபத்தொன்று இடம்பெற்று ஏழு பேர் உயிரிழந்த இடத்திலேயே இந்த விபத்தும் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் ஓட்டோவில் பயணித்த மூன்று ஆண்கள் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து தொடர்பில் நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
23 minute ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
6 hours ago
9 hours ago