Editorial / 2024 ஜனவரி 05 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

பயணப் பையில் 6 வெற்று ரவைகளை வைத்துக்கொண்டு ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். .
குறித்த நபர் ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதான நுழைவாயிலுக்கு வௌ்ளிக்கிழமை (05) காலைவந்தபோது, அவரது பயணப் பையை ஸ்கேன் செய்தபோது, வெற்று ரவைகள் அவதானிக்கப்பட்டது. அதனையடுத்து தலதா மாளிகை பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கண்டி தலைமையக பொலிஸாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் வசிக்கும் அந்த நபர், தனக்கு சொந்தமான நிலம் வைத்திருப்பவர் என்றும் சட்டரீதியான துப்பாக்கியை பயன்படுத்துபவர் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
தனக்குத் தேவையான மருந்துகளை கண்டி ஒளடத சந்தையில் கொள்வனவு செய்ய வந்த போது தலதா மாளிகைக்கு வந்ததாகவும், பையில் வெற்று ரவைகள் இருந்தமை தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட துப்பாக்கியின் ஆவணங்களை கொண்டு வருமாறு அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் மேலதிக விசாரணைகள் நடத்தப்படும் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
24 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
38 minute ago
1 hours ago
1 hours ago