2025 ஜூலை 21, திங்கட்கிழமை

ரூ.1,000 விவகாரம்; பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கிறது அரசாங்கம்

Nirosh   / 2020 மே 21 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு அறிவுறுத்தியிருப்பதாக பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள், கொரோனா வைரஸ் தாக்கதால் தடைபட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரண, அந்தப் பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், சிறு தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு விசேடக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தப்படவுள்ளதோடு, புதிய தேயிலைக் கன்றுகளையும் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறு தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தேயிலைக் கன்றுகளை வழங்கும் நடவடிக்கைக்கு, 180 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுதேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு, 7 சதவீத வட்டியில், காணியின் அளவுக்கு ஏற்ப சுமார் 10 முதல் 20 இலட்சம் ரூபாய் அளவில் கடனை எதிர்காலத்தில் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X