2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

ரொசட் தோட்ட மக்கள் பணிபகிஷ்கரிப்பு

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 01 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.சுரேஸ்குமார்

தோட்ட நிர்வாகத்துக்கு எதிராகவும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும்  ஹாலிஎல-   ரொசட்  முதலாம் பிரிவு தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (31) பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தோட்ட கம்பனிகளின்  வெளியார் உற்பத்தி முறையால், தொழிலாளர்களுக்கு நிலையான வருமானத்தைப் பெறமுடியாது உள்ளதுடன்,   தொழிலாளர்களது வேலைநாட்கள் குறைவானதாகவே காணப்படுவதாக இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 ஆனால் தோட்ட நிர்வாகம் எவ்வித உற்பத்தி செலவுகளும் இன்றி, அதிக இலாபத்தை வெளியார் உற்பத்தி முறையால் சம்பாதித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே, தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் இந்த அநீதிகளுக்காக, மக்கள் பிரதிநிதிகள் குரல்கொடுக்க வேண்டும் என்றும்  பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X