Editorial / 2018 ஜனவரி 18 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
லிந்துலை , மெராயா நகரிலுள்ள இரு சில்லறை வியாபார நிலையங்களில் இன்று (18) அதிகாலை திடீரெனத் தீப்பற்றியதாக, லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீயினால் சில்லறை வியாபார நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. மேலும், இதன்போது எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்ற போதிலும் பொருள்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
பொலிஸார், பொதுமக்கள் உதவியுடன் நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மின்சார ஒழுங்கு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில், லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .