Editorial / 2023 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு, செ.திவாகரன்
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்டபட்ட மட்டுக்கலை தோட்டத்தில் திங்கட்கிழமை ( 14 ) காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடு ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த தீ விபத்தின் போது உயிர் சேதங்கள் மற்றும் தீ காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதோடு, பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன
குறித்த வீட்டில் எரிவாயு கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


7 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
1 hours ago