2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

லிந்துலையில் தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 14 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்

தலவாக்கலை பெருந்தோட்டத்துக்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த சின்ன மட்டுக்கலை, பெரிய மட்டுக்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து மட்டுக்கலை தொழிற்சாலைக்கு முன்பாக பதாதைகளை ஏந்திவாறு, கறுப்பு கொடிகளை பிடித்து, கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தால் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகவும், தேயிலை மலைகள் காடாகி கிடப்பதாகவும் கொழுந்து விளைச்சல் குறைவாக இருப்பதால் தற்போது தோட்ட நிர்வாகம் ஒரு நாள் சம்பளத்திற்கு 20 கிலோ கட்டாயமாக பறிக்க வேண்டுமெனவும் நல்ல கொழுந்து எடுத்து கொடுக்க வேண்டுமென தோட்டத் தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதோடு குறைவாக கொடுத்தால் கிலோ கணக்கில் சம்பளம் தருவதாகவும் இதனால் தொழில் ரீதியாக பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் தோட்ட அதிகாரி முறையாக தோட்டத்தை வழி நடத்தவில்லை என தெரிவித்தும் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

காலை 8 மணி முதல் பகல் 11 மணிவரை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் இல்லாத காரணத்தினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக கூட்டு ஒப்பந்தத்தை மீண்டும் வேண்டும் எனவும் பேச்சுவார்த்தைகளை சும்மா நடத்தாமல் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டதுடன் தமக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் இதுவரை முறையாக கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டதுடன் குறிப்பிட்ட தோட்டங்களை நடத்த முடியாவிட்டால் தமக்கு வழங்குமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X