Kogilavani / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.பாலேந்திரன்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டில்குற்றி தோட்டத் தொழிலாளர்கள், இன்று (17) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தேயிலை மலையில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களை, தோட்ட வைத்திய அதிகாரியின் குடும்பத்தினர், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர் என்றும் இது தொடர்பில் தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்த போதிலும் தோட்ட நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துமே, தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது தொழிலாளர்கள் பறித்த தேயிலைக் கொழுந்தை தொழிற்சாலைக்குக் கொண்டு செல்ல தொழிலாளர்கள் தடைவிதித்ததால் பதற்ற நிலை ஏற்பட்டது. லிந்துலை பொலிஸாரின் தலையீட்டை அடுத்து கொழுந்து தொழிற்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
அத்துடன் பொலிஸார் இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சமரசம் செய்து அனுப்பியுள்ளனர்.



21 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
22 minute ago
26 minute ago
33 minute ago