Kogilavani / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
லிந்துலை பிரதேச விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பல்வேறுப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமமேவுக்கும் லிந்துலை பிரதேச விவசாயிகளுக்கும் இடையிலான சந்திப்பு, தலவாக்கலை-லிந்துலை விவசாய மத்திய நிலையத்தில், நேற்று (28) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் லிந்துலை பிரதேச விவசாயிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது விவசாயிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறுப் பிரச்சினைகள் தொடர்பில், அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச் சென்றனர்.
இடைத்தரகர்கள் தங்களிடமிருந்து குறைந்த விலைக்கு மரக்கறிகளைக் கொள்வனவு செய்வதாகவும் இதனால் தாம் முதலீடு செய்த தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் விவசாயிகள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுச்சென்றுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், உரிய விலைக்கு மரக்கறிகளை நேரடியாக கொழும்பு மத்திய நிலையத்துக்கு ஏற்றுமதித் செல்வதுத் தொடர்பிலும் லிந்துலையில் மரக்கறி கொள்வனவு மத்திய நிலையமொன்றை அமைத்தல், விவசாயம் செய்ய காணி, மானிய விலையில் பசளை, விவசாய இயந்திரங்கள் வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago