Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Janu / 2023 மே 31 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவ, லின்ஸ்டெட் கீழ் பிரிவு தோட்ட மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம் 05 வருடங்கள் இரண்டு மாதங்கள் கடந்துள்ளன. எனினும், இதுவரையிலும் நீர்விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை என அத்தோட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். .
உலக வங்கியின் கடன் உதவியின் கீழ் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர்க் கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்பட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டமானது 226 இலட்சம் ரூபாய் செலவில் 2019.03.23ம் திகதி இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் பாராமரிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டபோது முறையான பாராமரிக்கப்படவில்லை. இதனால், குழாய்கள் துருப்பிடித்துள்ளன. அப்பகுதியும் பற்றைக்காடாக காட்சியளிக்கின்றது.
அத்தோட்டத்தில் மாத்திரம் 126குடும்பங்கள் வசித்து வருகின்றன. எனினும், அத்திட்டம் இன்னுமே கையளிக்கப்படவில்லை. பாராமரிப்பு தொடர்பில் அதிகாரிகள் எவரும் கவனம் செலுத்துவதில்லை என்றும் அம்மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வெளியிட்டுள்ளனர்.
ஆகையால், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சொத்துக்களை காப்பாற்றுவதுடன், தங்களுக்குத் தேவையான நீரை முறையாக பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
எஸ்.சதீஸ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago