2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

லொறிகள் மோதிக்கொண்டதில் மூவர் காயம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா - ஹட்டன் வீதியில் நானு ஓயா - ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று (27) மாலை 6.00 மணியளவில் இரண்டு லொறிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், இவர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியொன்று, பட்டிப்பொலயிலிருந்து கொழும்பு நோக்கி சிலிப்பர் கட்டைகளை ஏற்றிச் சென்ற போது,  ரதல்ல குறுக்கு வீதியில் மற்றுமொரு லொறியை முந்திச் சென்ற போது, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஏதிரே வந்த லொறியுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மற்றைய லொறியும் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இரண்டு லொறிகளில் பயணித்த இருவர் மற்றும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான லொறியின் சாரதி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X