2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

லொறி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Kogilavani   / 2017 ஜூலை 04 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

இறக்குவாணை ஹொரமுல்ல தோட்டத்திலிருந்து, கஹவத்தை, அவுப்பைத் தோட்டத்துக்கு,  இன்றுக் காலை  சென்ற லொறியொன்று, 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக, கஹவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிலாளர்களை வேலைக்கு ஏற்றிச் செல்வதற்காக சென்ற லொறியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியின் சாரதி, லொறியை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தச் சென்ற போதே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில்,  எவருக்கும் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .