2025 மே 12, திங்கட்கிழமை

லொறி விபத்தில்: கடும் பாதிப்பு

Editorial   / 2023 ஜூலை 26 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா

டயகம – நுவரெலியா பிரதான வீதியில், லிந்துலை-என்போல்ட் பாலமொன்றில் மோதுண்டு, லொறி ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  இந்த விபத்து செவ்வாய்க்கிழமை 7.10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

லொறி பாலத்திற்கு குறுக்கே விபத்துக்கு உள்ளாகியுள்ளமையினால், அந்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா – டயகம, தலவாகலை – எல்ஜின் ஆகிய நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தடையினால், தங்கக்கலை மற்றும் மெரயா ஆகிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் வருகை குறைந்துள்ளதாகவும்   பாடசாலை மாணவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X