2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

லொறி விபத்தில் சாரதி காயம்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

பலாங்கொடையிலிருந்து தம்புள்ள பொதுச் சந்தைக்கு, மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லொறி, பதுளை - மஹியங்கனை வீதி, தல்தென 11ஆம் மைல்கல் பகுதியில், இன்று அதிகாலை 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதி படுகாயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் கண்ணாடித்துகள் சிதறிக் கிடந்ததாகவும் இரு வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதால் இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாமென்றும் பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

முன்னால் வந்த வாகனத்தில் மின்விளக்குகள் ஒளிர்ந்தமையால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியதாக, லொறியின் சாரதி வாக்குமூலமளித்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .