Gavitha / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கொட்டகலை பிரதேச சபை நிர்வாகத்துக்குட்பட்ட, தலவாக்கலை லோகி தோட்டத்துக்குச் செல்லும் பாதை, பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் இருக்கும் நிலையில், இதை துரிதமாக செப்பனிட்டுத் தருமாறு, பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் இருந்து, சுமார் 3 கிலோமீற்றர் வரையான தூரமே, மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றும் இந்த வீதியைச் செப்பனிட்டுத் தருவதாக, தேர்தல் காலங்களில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், எல்லாம் பொய் உறுதியாகவே உள்ளது என, பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்னர்.
இப்பாதையை, தினம் 200 குடும்பங்கள் பயன்படுத்துவருவதாகவும் இந்த வீதி வழியில் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு, அதிக கட்டணம் செலுத்தி ஓட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி, உரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே லோகி தோட்ட மக்களின் நலன் கருதி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாதையினை துரிதகதியில் செப்பனிட்டு தருமாறு மாவட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026