2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

வாகன விபத்தில் 10 பேர் காயம்

Janu   / 2024 ஜூன் 11 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன்  தனியார் பஸ்  ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (11)  காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பஸ்ஸில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்தில்  பஸ் மற்றும் வேனுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன்  பஸ் சாரதி கைது செய்யப்பட்டதாகவும்   சம்பவம் தொடர்பில் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் , குறித்த விபத்து காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

கௌசல்யா , செ.தி. பெருமாள் 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .