2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடக்கிலிருந்து வந்தவர்களுக்கு மொனராகலையில் வரவேற்பு

R.Maheshwary   / 2022 ஜூலை 25 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கிலிருந்து பாதயாத்திரையாக வந்த யாத்திரிகர்கள்,  மொனராகலையில் வைத்து வரவேற்கப்பட்டனர்.

கடந்த 22ஆம் திகதி மொனராகலை ஓகந்த தேவாலயத்துக்கு அருகில் வைத்து, கதிர்காம கோவிலின் பஸ்னாயக்க நிலமே டிசான் விக்ரமரத்ன மற்றும் மொனராகலை மாவட்ட அதிபரி குணதாச சமரசிங்க ஆகியோர் யாத்திரிகர்களை வரவேற்றனர்.

அத்துடன் குறித்த யாத்திரிகர்களுக்கு தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்கலதெல பண்டாரவால் உணவு வழங்கப்பட்டது.

ஓகந்த தேவாலயத்துக்கு அருகில் யால தேசிய வனத்தின் ஊடாக கதிர்காமத்தை நோக்கி பயணிக்கும் குறித்த பாதயாத்திரை குழுவினர், இந்த மாதம் 28ஆம் திகதி கதிர்காமம் புனித பூமியை சென்றடைவர்.

இவ்வாறு பாதயாத்திரை மேற்கொள்ளும் குழுவினருக்கான சுத்தமான குடிநீர் வசதி, விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல் என்பவற்றை பொலிஸாரும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X