Janu / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
நானுஓயாவிலிருந்து கிரிமெட்டிய நோக்கி அதிவேகமாக பயணித்த பொலிரோ (Bolero) கெப் ரக வாகனமொன்று, கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
அதிவேகமாக சென்ற இவ்வாகனத்தின் பிரேக் தொகுதி (Braking System) திடீரென செயலிழந்தமையாலேயே, வாகனம் வீதியை விட்டு விலகி வீட்டின் மீது புரண்டு இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில், வாகனத்தின் சாரதி மற்றும் அதில் முன் இருக்கையில் பயணித்த இருவர் என மொத்தம் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .