மு.இராமச்சந்திரன் / 2017 ஜூலை 01 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்லப் பகுதியிலுள்ள குடியிருப்பொன்றை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக, வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்றிரிவு 7 மணியளவிலே இடம்பெற்றுள்ளதுடன்,
வீட்டில் யாரும் இல்லாத வேளையில், வீட்டின் கதவை உடைத்து, 45,000 ரூபாய் பெருமதியான தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்டுள்ளன.
வெளியில் சென்றுவிட்டு, இரவு 8.30 மணயளவில் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற வீட்டு உரிமையாளர்கள், வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து, வட்டவளை பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
முறைபாட்டையடுத்து, வட்டவளை மற்றும் ஹட்டன் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .