Editorial / 2020 டிசெம்பர் 25 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்
வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் 10 பேருக்கு நேற்று (24) தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனடிப்படையில் இன்று (25) கிடைக்கப்பெற்ற அறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில்,21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குகின்றனர் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரிய வருகிறது.
கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின் தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானது அதனையடுத்து அவரோடு தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்டது.
இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago