2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வட்டார உறுப்பினர் ரஜீவ்காந்தி கைது

Kogilavani   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

தோட்ட மக்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் பேசித் தீர்ப்பதற்காக சென்ற, கொத்மலை பிரதேச சபை உறுப்பினரும் புரட்டொப் வட்டார அமைப்பாளருமான ரஜீவ்காந்தி, புஸ்ஸல்லாவை பொலிஸாரால், நேற்று (21) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

புரட்டொப் அயரி தோட்டத்தில் காணப்பட்ட தரிசு நிலங்களை, அங்குள்ள இளைஞர்கள் சுயத்தொழிலுக்காக பயன்படுத்த முயற்சித்துள்ளனர்.

எனினும் தரிசுநிலங்கள், தோட்ட நிர்வாகத்துக்குச் சொந்தமானவை என்று தெரிவித்துள்ள நிர்வாகம், அந்தக் காணிகளில் தோட்ட இளைஞர்களை சுயதொழில் செய்ய அனுமதிக்கவில்லை. 

இதற்கெதிராக தோட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், தோட்ட நிர்வாகத்துக்கும் தோட்டமக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையை தோட்ட நிர்வாகத்துடன் பேசித் தீர்ப்பதற்கு, புரொட்டப் வட்டார உறுப்பினர் ரஜீவ்காந்தி முயன்றுள்ளார் என்றும் எனினும் தோட்ட நிர்வாகம் ரஜீவ்காந்திக்கு எதிராக, புஸ்ஸல்லாவை பொலிஸில் முறைப்பாடு செய்த நிலையில், பொலிஸார், வட்டார உறுப்பினரை கைதுசெய்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

வட்டார உறுப்பினரின் கைது மற்றும் தோட்ட நிர்வாகத்தின் ஏதேச்சதிகார போக்குக்கு, தோட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X