Kogilavani / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி, நித்தவலை வீதியிலுள்ள வடிகானில் நேற்று(15) மாலை அடித்துச் செல்லப்பட்ட மாணவி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டி, பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கல்வி கற்று வந்த பாத்திமா அஸ்ரா சகாப்தீன் (வயது 16) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டியில் நேற்று மாலை பெய்த கடும் மழைக்காரணமாக மேற்படி வீதியின் அருகேயுள்ள வடிகானிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.
பாடசாலை முடிந்து இவ்வீதி வழியாக பயணித்த மாணவி, மழைக்கு ஒதுங்க முற்பட்டபோதே வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இவரது சடலம் எலிபண்ட் பாத் பகுதியில் வைத்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago