2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வட்டகொட தெப்பத்தேர் இருளிலேயே பவனி வந்தது

Gavitha   / 2017 ஏப்ரல் 17 , பி.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சுஜிதா

தலவாக்கலை, வட்டகொடை தெப்பத் தேர் திருவிழா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வெகு சிறப்பாக நேற்று (17) நடைபெற்றது.  

இரண்டு கிராமங்களின் முத்தேர்கள் வட்டகொடை நகரை நோக்கிப் பவனி வந்தமை, தெப்பத்தேர் திருவிழாவுக்கு இன்னுமின்னும் மெருகூட்டியது.  

எனினும், வந்ததோடு நகரின் ஒரு பகுதி, மின்சாரமின்றி இருளில் மூழ்கியிருந்தமையால், தேர்களில் ​ஒளிர்ந்த மின்குமிழ் வெளிச்சத்தை தவிர, நகரின் பெரும்பாலான பகுதி, இருளிலேயே மூழ்கியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் ஏற்பட்ட மின்சாரத் தடை, நேற்றுத் திங்கட்கிழமை காலை 9 மணிவரையிலும் நீடித்தது.  மின்சாரத் தடை தொடர்பில், கொத்மலை மின்சார சபைக் காரியாலயத்துக்கும் நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகளின் கவனத்துக்கும் பல தடவைகள் கொண்டு வந்த போதிலும், எவ்வித பயனும் கிட்டவில்லையென பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில், கண்டியிலுள்ள மத்திய மாகாணத்தின் மின்சார சபையின் தலைமை காரியாலயத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு, தொடர்பு கொண்ட வினவிய போது,  

மின்சார தடை தொடர்பாக தமக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை. எனினும், பிரதேச மக்களின் சமய விழாவைக் கருத்தில் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் பேச்சாளர் ஒருவர் கூறினார் என்றும், தேர்திருவிழாவுடன் சம்பந்தப்பட்ட முக்கியஸ்தர் தெரிவித்தார். 

ஆனால், முத்தேர் வட்டகொடை நகரை பவனி செல்லும் வரையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.  இதேவேளை, தேர்த்திருவிழாவை குழப்பம் வகையில், ஒருசில சக்திகளால், இந்த மின்சாரம் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் பிரதேசவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .