2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வட மாகாண தொண்டர் நியமனம்

Editorial   / 2018 மார்ச் 29 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முதற் கட்டமாக, வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் 182 பேருக்கும், ஓப்பந்த அடிப்படையிலான 142 ஆசியர்களுக்கும் என, மொத்தமாக 324 நியமனம் வழங்கும் நிகழ்வு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், நேற்று (28), அலரி மாளிகையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி இராஜாங்க அமைச்சர்  வே.இராதாகிருஸ்ணன், வட மாகாண ஆளுனர் ரெஜினோல்குரே, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராட்சி உட்பட, கல்வி அமைச்சின் மேலதிக செலாளர்கள், அதிகாரிகள், உத்தியோகஸ்த்தர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 494  வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான நேர்முக பரீட்சை, எதிர்வரும் ஏப்ரல் மாதம்  19 - 20ஆம் திகதிகளில், கல்வி அமைச்சில் நடைபெற்று, இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்க நவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X