2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

வர்த்தக நிறுவன காட்சி அறையில் பாரிய தீ

Editorial   / 2026 ஜனவரி 16 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

உமா மகேஸ்வரி 

இரத்தினபுரி பண்டாரநாயக்க வீதியிலுள்ள பிரபல வர்த்தக நிறுவனத்தின் காட்சியறை திடீரென தீப்பிடித்து எரிந்ததனால் அக்காட்சியறை பலத்த சேததத்திற்குள்ளானதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்   

வெள்ளிக்கிழமை (16)   இடம் பெற்ற இச்சம்பவத்தில்  தொலைக் காட்சி பெட்டிகள், குளிர் சாதனப் பெட்டிகள், உள்ளிட்ட பெறுமதி மிக்க பொருட்கள் சேதமடைந்த போதிலும்.உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

  இரத்தினபுரி நகரசபை க்கு சொந்த தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ஒன்றிணைந்து பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் அருகில் உள்ள ஏனைய வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.என்பது குறிப்பிடத்தக்கது,

  இந்த தீவிபத்து க்கான காரணம் இதுவே கண்டறியப்படவில்லை.இது குறித்து இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர், 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X