2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

வருன் பிரதீஸின் இறுதிக் கிரியைக்கான பொறுப்பை வடிவேல் எம்.பி ஏற்றார்

Kogilavani   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கால்கோள் விழாவுக்குச் சென்றபோது விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்த மாணவனின் இறுதிக்கிரியைக்கான முழுமையான செலவை, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் அம்மாணவனின் பூதவுடலை, பதுளை வைத்தியசாலையிலிருந்து விடுவிப்பதற்கான ஏற்பாடுகளையும் நேற்று முன்தினம் (16) அவர் மேற்கொண்டுள்ளார்.

பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலத்தில், தரம் 1இல் இணைந்துக்கொள்வதற்காக கடந்த திங்கட்கிழமை (15) தனது பாட்டியுடன் சென்ற மாணவனான சிவனேசஷன் வருன் பிரதீஸ், லொறியொன்றில் மோதி ஸ்தலத்திலேயே பலியானார். 

இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறுவனின் பாட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் சிறுவனின் சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சடலத்தை விடுவிப்பதற்கான நடவடிக்கையில், வடிவேல் சுரேஷ் எம்.பி ஈடுபட்டதுடன், விபத்தில் காயமடைந்த சிறுவனின் பாட்டியையும் சந்தித்து நலன் விசாரித்தார்.

அத்துடன் சிறுவனின் இறுதிக்கிரியைக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொண்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X