R.Maheshwary / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
சட்டங்களை கொண்டு வந்தாலும் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
“நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவருகின்றது. கொரோனா மற்றும் டொலர் தட்டுப்பாட்டால் மட்டும் இந்நிலைமை ஏற்படவில்லை. அமைச்சுகளில் இடம்பெறும் ஊழல்களும் இதற்கு பிரதான காரணமாகும். சீனி, எண்ணைய், வெள்ளைப்பூடு என எல்லாவற்றிலும் ஊழல்கள் தலைவிரித்தாடுகின்றன.
அதேபோல வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் சட்டங்களை கொண்டுவந்தாலும் அவை அமுலுக்குவருவதை காணமுடியவில்லை. வர்த்தக மாபியாக்கள் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதால் பொதுமக்களுக்கே பாதிப்பு ஏற்படுகின்றது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .