Editorial / 2023 மே 16 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
மனித உடலின் சகல பாகங்களையும் படக் காட்சி மூலம் விளக்கிச் சொல்லும் பாடசாலை மாணவி ஒருவரைப் பற்றிய செய்தி பொகவந்தலாவையிலிருந்து எமக்குக் கிடைத்துள்ளது.
அவள் பெயர் சங்கர்தாஸ் கன்ஷிகா (07) பொகவந்தலாவ ஹோலிரோசரி தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.
மனித உடலின் அனைத்து உறுப்புகளையும் சிறுவயதிலிருந்தே நன்கு அறிந்த சங்கரதாஸ் கன்ஷிகா, உலகின் அனைத்து நாடுகளையும் அவற்றின் தலைநகரங்களையும், இலங்கையின் அரச பரம்பரையையும், இலங்கையின் கொடியையும், சின்னத்தையும் படங்களின் மூலம் விளக்குவதில் வல்லவர்.
இவரது திறமை குறித்து கருத்து தெரிவித்த தந்தை தங்கராஜ் சங்கரதாஸ் மற்றும் தாய் பரமநாதன் பாமினி ஆகியோர் தங்களது மூத்த மகளுக்கு சிறுவயதிலிருந்தே நல்ல அறிவு இருந்ததாக தெரிவித்தனர்.
படங்களில் சித்தரிக்கப்பட்டவை குறித்து பாடசாலையிலோ அல்லது வீட்டிலோ அவருக்கு எந்த கல்வியும் வழங்கப்படவில்லை என்று அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

9 hours ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
15 Jan 2026