2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

வழுக்கியதால் வீதியில் கரணமடித்த லொறி

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ், எஸ்.கணேசன், ரஞ்சித் ராஜபக்ஸ

மொரட்டுவையிலிருந்து பூண்டுலோயா பகுதியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றுக்கு 20 தொன் விறகுகளைக் கொண்டுச் சென்ற லொறியொன்று, அதிக வேகம் காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று (29) இரவு 9.30 மணியளவில் ஹட்டன்- குடாகம பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலையுடன் பிரதான வீதிகள் வழுக்கும் தன்மையில் இருப்பதால், அதிக வேகத்துடன் பயணித்த குறித்த லொறி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது லொறியின் சாரதி, உதவியாள் மற்றும் இன்னொரு நபரும் லொறியில் இருந்துள்ள நிலையில், உதவியாள் மாத்திரம் படுகாயமடைந்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X