Janu / 2024 ஜூன் 11 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில், வேன் ஒன்றுடன் தனியார் பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
விபத்தின் போது வேனில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கினிகத்தேன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பஸ்ஸில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸும், ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
விபத்தில் பஸ் மற்றும் வேனுக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் பஸ் சாரதி கைது செய்யப்பட்டதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் , குறித்த விபத்து காரணமாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .
கௌசல்யா , செ.தி. பெருமாள்

6 minute ago
22 minute ago
29 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
29 minute ago
46 minute ago