Editorial / 2023 மே 15 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணொருவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அப்பெண்ணை அழைத்துவந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.
அந்த வீட்டில் திருடினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், வீட்டின் உரிமையாளரினால் வெலிகட பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவந்தபோது, திடீரென சுகயீனமடைந்த அப்பெண், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின்னர் மரணமடைந்தார். பதுளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஆர். செல்வராசா குமார் (வயது 45) என்ற பெண்ணே மரணமடைந்துள்ளார். மூச்சுத்திணறல் காரணமாகவே அப்பெண் உயிரிழந்துள்ளார் என்று அறியமுடிகின்றது.
இந்தப் பெண் பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரும் வர்த்தக பிரமுகருமான சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டிலேயே பணிப்பெண்ணாக பணிப்புரிந்து வந்துள்ளார்
11 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
33 minute ago
39 minute ago
1 hours ago