Editorial / 2018 ஓகஸ்ட் 24 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த வானொன்று, கம்பளை - நாவலப்பிட்டி பிரதான வீதி, கொன்தென்னாவ பிரதேசத்தில் வைத்து 40 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானத்தில், மூவர் படுகாயமடைந்த நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (24) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்தே, வான் விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வானில் பயணித்த மூவரே, இவ்வாறு படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .