2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வாழைகளை நாசமாக்கும் ‘பெனமா’

Gavitha   / 2021 ஜனவரி 07 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

எம்பிலிபிட்டிய மற்றும் மகாவலி திட்டத்தின் வளவ பிரிவின் கீழுள்ள வாழைத் தோட்டங்களில், “பெனமா” எனும் நோய் ஏற்பட்டு வருவதால் வாழைச் செய்கையாளர்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, வாழைத் தோட்டங்களின் விவசாய அமைப்புகள் புகார் செய்துள்ளன என்றும் கடந்த சில காலங்களாக, இந்த நோயால் தங்களது வாழைகள் நாசமாகியுள்ளமை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டும் முறையான உதவிகள் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

முதலில், வாழை இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவதாகவும் பின்னர் முழு வாழை மரமும் நாசமாகிவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இப்பிரதேச விவசாய அபி விருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய தீர்வுக்காக, நோயால் பாதிக்கப்படும் மரங்களை வெறோடு பிடுங்கி வீசும் பணிகயை விவசாயிகள் முன்னெடுத்து வரவதாகவும் இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .