2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

வாழ்க்கையில் வெற்றிபெற ஆங்கிலத்தை விருத்தி செய்ய வேண்டும்

R.Maheshwary   / 2021 டிசெம்பர் 21 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.சுந்தரலிங்கம்

 தமிழ் மொழியினை மாத்திரம் வைத்துக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி காண முடியாது.   இணை மொழியாக உள்ள ஆங்கில மொழியினை மாணவர்கள் மத்தியில் கற்பிக்க வேண்டும் என ரொட்டரி கழகத்தின் முன்னாள் ஆளுநர் பி.டி.ஜி ஜோர்ஜ் தெரிவித்தார்.

பொகவந்தலாவை  பகுதியில் வறுமை கோட்டின் கீழ், கல்விப் பயிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கும் பிரிடோ நிறுவனத்தின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளுக்கும் சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் செலவில் தொற்று நீக்க திரவம் மற்றும் முகக்கவசம் என்பவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.


10 ஆண்டுகள்   ஆங்கில பாடத்தினை கற்றும் கூட, ஆங்கிலம் பேச முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது. இதற்கு நாம் கல்வி கற்கும் முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். ஆங்கில மொழியினை இன்று பெரும்பாலானவர்களுக்கு எழுத வாசிக்க தெரிந்தாலும் பேச முடியாது. இதனை மாற்றியமைக்க வேண்டும் ஆகவே, பாலர் பாடசாலை முதல் ஆங்கில கல்வியினை பேசுவதற்கான பயிற்சியினை பெற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X