Editorial / 2018 மே 11 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}


மு.இராமச்சந்திரன்
நாவலப்பிட்டி - கம்பளை பிரதான வீதி, பத்துனுபிட்டிய ரயில் கடவைக்கருகில், இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இருவர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பளையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் நாவலப்பிட்டியிலிருந்து கம்பளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த ஒருவருமாக இருவர் காயமுற்ற நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை, நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .