Kogilavani / 2018 ஜூன் 08 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
நுவரெலியா - உடப்புஸ்ஸலாவ பிரதான வீதி, கந்தப்பளை சென்.ஜோன்ஸ் தோட்டத்துக்கு அருகில், நேற்று (7) மாலை இடம்பெற்ற விபத்தில், ஐவர் படுகாயமடைந்து, நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியாவிலிருந்து உடபுஸ்ஸலாவ நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸூம், கோணப்பிட்டியவிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த லொறியும், நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளன.
பஸ்ஸில் மோதுண்ட லொறி பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. .
விபத்தில், தனியார் பஸ்ஸில் பயணித்தவர்களில் இருவரும், லொறியில் பயணித்த மூவருமே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன், லொறிக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த கந்தப்பளை பொலிஸார், இவ்விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .