2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

விபத்தில் ஓட்டோவுக்கு சேதம்

Kogilavani   / 2021 பெப்ரவரி 10 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிந்துலை திஸ்பனை தோட்ட  சந்தியில், சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில், ஓட்டோவொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

எல்ஜின் பகுதியிலிருந்து தலாவக்கலை நோக்கிப் பயணித்த தனியார் பஸ்ஸும் டயகமவிலிருந்து வந்த ஓட்டோவொன்றும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் மோதுண்ட ஓட்டோவானது, சற்றுத்தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் பஸ்ஸுக்காக சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்துள்ளனர் என்றும் இவர்களும் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X