2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 12 , பி.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நவயாலதென்ன ஜம்புகஹபிடிய வீதியில் சனிக்கிழமை (11) இரவு இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் 14 வயதுடைய மாணவி மற்றும் அவரது 47 வயதுடைய தந்தை ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர் என கட்டுகஸ்தோட்டை
பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, ராஜகிரிய பிரசேத்தை சேர்ந்த சிலர் மரண வீடு ஒன்றுக்கு வந்த வேன் நவயாலதென்னை வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த தந்தை மற்றும் மகள் மீது மோதியதில் அவ்விருவரும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தனியார் வகுப்பு ஒன்றில் கலந்து கொண்டு தந்தையுடன் வீடு சென்று கொண்டிருந்த போவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் பொல்கொலை பிரதேசத்தை சேர்ந்த ரொஹன ஜயந்த என்ற 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையும் அவரது இளைய மகளான 14 வயதுடைய மதூஷி மேகலா என்ற மாணவியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக வேனின் சாரதி கைது செய்யப்பட்டு கண்டி பிரதான நீதவான முன் ஆஜர் செய்யப்பட்டார். அவரை 14 நாட்களுக்கு விளக்க மறியளில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X