Kogilavani / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்
ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதி, நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில், இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த மூவர், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூடிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த ஓட்டோவொன்று, நிவ்வெளிகம பகுதியில் நிறுத்தி வைக்கபட்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் மீது மோதியுள்ளதுடன், பஸ்ஸூக்காகக் காத்திருந்த பயணிகள் இருவர் மீதும் மோதியுள்ளது.
இவ்விபத்தில் ஓட்டோ சாரதி உள்ளடங்களாக பயணிகள் மூவரே, படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை என்றும் விபத்துத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .