Kogilavani / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}






எஸ்.கணேசன்
ஹட்டன் நகரிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் உணவகங்களில், பொது சுகாதார உத்தியோகத்தர்கள், திடீர் சோதனைகளை இன்று மேற்கொண்டனர்.
இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், பாவனைக்கு உதவாத பொருட்கள் மற்றும் உணவு பண்டங்களை விற்பனை செய்த வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், உணவகங்களில் சமைப்பவர்கள், வெதுப்பகங்களில் பணிப்புரிபவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், நன்கு சுத்தமாக உணவு வகைகளை தயாரிக்க வேண்டுமெனவும் உணவு தயாரிக்கும் போது பாதுகாப்பு வழிமுறைகள், உரிய ஆடைகள் அணிய வேண்டுமெனவும் அவர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
தீபாவளி முடியும்வரை இந்த சோதனை நடவடிக்கைகள் தொடருமென, சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
26 Apr 2026
26 Apr 2026